காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம்: தமிழக பிரதிநிதி யார்?
காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் அடுத்த வாரம் கூடவிருப்பதாகவும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழக பிரதிநிதியாக பிரபாகரன் என்பவர் நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட நெடு சட்டப்போராட்டத்திற்கு பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்த மத்திய அரசு நேற்று இதனை அரசிதழிலும் வெளியிட்டது. இதனையடுத்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டத்தை டெல்லியில் கூட்ட முடிவு செய்யப்பட்டுளது. இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் செய்து வருகிறார்.
காவிரி நீர் ஆணையத்தில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இவர்களில் 2 பேர் முழு நேர உறுப்பினர்களாகவும் 2 பேர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். மேலும் மத்திய அரசு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய அரசுகள் சார்பில் தலா ஒருவர் வீதம் 5 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆணையத்தில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆணைய உறுப்பினராக இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.