அஜீத் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம்.
சமீபத்தில் டெம்பர்’ என்ற மாபெரும் தெலுங்கு ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பூரி ஜெகந்நாத், அடுத்ததாக இரண்டு படங்களுக்கான ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்துள்ளார். ஒரு படத்தில் சார்மியும் மற்றொரு படத்தில் வருண் தேஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.இந்நிலையில் பூரி ஜெகந்நாத் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு திரைக்கதை அமைத்து வருவதாகவும், அந்த படத்தில் தல அஜீத்தை நடிக்கவைக்க அவர் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பூரி அஜீத்தை நேரில் சந்தித்து தனது திட்டத்தை கூறியதாகவும், அதற்கு அஜீத் திரைக்கதையை முழுவதும் தயார் செய்துவிட்டு தன்னை அணுகுமாறு கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
அஜீத் இன்னும் சில நாட்களில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் பிசியாகிவிடுவார். இந்த படத்தை முடித்தபின்னர் பூரியின் திரைக்கதை தனக்கு ஏற்றவாறு இருந்தால் நடிப்பார் என கூறப்படுகிறது. அவ்வாறு அவர் இயக்கினால் அஜீத் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.