பொதுவாக நாம் செய்யும் சுகாதார தவறுகள்!

368311-350x250

உங்களது அன்றாட நடவடிக்கைகள் உங்கள் உடல்நலத்தை பாதிக்கிறதா? உங்களுக்கு அப்படியொன்றும் தெரியவில்லை ஆனால் உடல்நலம் சரியில்லாதது போல் உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்களின் ஒருசில பழக்கவழக்கங்கள், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று அர்த்தம். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களைத் திருத்திக் கொண்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

போதிய பிளாஸ் செய்யாதது வாய் சுகாதாரம் என வரும் போது, உங்கள் பற்களை துலக்கினால் மட்டும் பத்தாது. பிளாசிங் செய்வதை ஒரு சீரான பழக்க வழக்கமாக்கி கொள்ள வேண்டும். பற்களுக்கு இடையே சிக்கியிருக்கும் அழுக்கினால் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதோடு, இரத்த ஓட்டத்தில் பாக்டீரியா போய் விடும். இது தீவிர அழற்சியையும், இதய நோய், வாதம் மற்றும் புற்று நோய் ஏற்படுவதற்கான இடர்பாட்டையும் அதிகரிக்கும். அதனால் அழுக்கினால் பற்கள் வலுவிழக்காமல் இருக்க வாரத்திற்கு ஒரு முறையாவது ப்ளாசிங் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

கனமான கைப்பையைத் தூக்கிச் சுற்றுவது பெரிய ஹேன்ட்பேக் தற்போதைய ஃபேஷனாக இருக்கலாம். ஆனால் இப்படி பெரிய கைப்பைகளை வைத்திருக்கும் போது அதனுள் பொருட்களைத் திணிக்க தூண்டும் என்பதை பெண்கள் உணர்வதில்லை. இவ்வளவு கனத்தை தூக்கி சுற்றும் போது முதுகு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஏற்படும். தசைச்சுரிப்பு, வட்டு நலிவு, கழுத்து பிரச்சனைகள், கீல்வாதம், மற்றும் மோசமான தோரணை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதனால் வாரம் ஒரு முறையாவது உங்களது ஹேன்ட்பேக் மற்றும் பர்ஸை சுத்தப்படுத்தும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள். முக்கியமான பொருட்களை மட்டும் அதில் வைத்து, மீதியை எடுத்து விடவும்.

தூக்கத்தை தவிர்த்தல் தூக்கம் என்பது நேரத்தை விரயம் செய்யும் விஷயம் என நீங்கள் நினைத்தால், மீண்டும் ஒரு முறை யோசியுங்கள். உங்கள் உடல் அதனை பழுது பார்க்க அதற்கு ஓய்வு தேவை. போதிய தூக்கம் இல்லையென்றால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள். நீங்கள் எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும், எவ்வளவு தான் உடற்பயிற்சிகள் செய்து வந்தாலும், தினமும் குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் வரை தூக்கம் அவசியம். தூக்கத்தை தவிர்ப்பவர்களுக்கு வாதம் மற்றும் இதய நோய் ஏற்படும் இடர்பாடு அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. அதனால் தான் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, எழுவது மிக முக்கியமாகும்.

உடற்பயிற்சியை ஒத்திவைத்தல் எப்படி அதிகமாக உடற்பயிற்சி செய்யக்கூடாதோ அதே போல் அதை ஒத்தி வைக்கவும் கூடாது. நீங்கள் எந்தளவிற்கு உடல் எடையை பராமரித்து வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு எடைப் பார்க்கும் கருவியை வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எடை பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வகையில் உங்கள் உடல் எடை அதிகரிப்பது தெரிய வந்தால், அதற்கான தக்க நடவடிக்கைகளை கால தாமதம் இல்லாமல் எடுக்கலாம் அல்லவா?

காலை உணவை தவிர்த்தல் நமக்கு தெரியாமலேயே நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் இதுவும் ஒன்றாகும். காலை உணவை தவிர்ப்பது என்பது உங்களது தினத்தை குறைந்த ஆற்றல் திறனுடன் தொடங்குவதை போலாகும். பகல் நெருங்கும் போதே நீங்கள் சோர்வடைய தொடங்குவீர்கள். இப்படி பசியுடன் இருப்பது உடல்நல ஆரோக்கியத்தை கெடுக்கவே செய்யும். அதற்கு காரணம் ஒரு நாளைக்கு எரிபொருளாக உங்கள் உடலுக்கு தேவைப்படும் கொழுப்பு உங்கள் உடலில் தேங்க ஆரம்பித்து விடும்.

அதிகமாக உடற்பயிற்சி செய்தல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்புடன் இருக்கத் தான் என்றாலும் கூட, அது அளவுக்கு அதிகமாக சென்று, நீங்கள் மணிக்கணக்கில் ஜிம்மில் கிடக்க நேர்ந்தால், அதனை கண்டிப்பாக நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் உடலை அதிகமாக வருத்தினால், அது ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பு, நோய் எதிருப்பு சக்தி அமைப்பு வலுவிழத்தல், தசைகளுக்கு பாதிப்பு மற்றும் மூட்டு/முதுகு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் உடலையும் அதற்கான வரம்புகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply