இந்தியில் ரீமேக் ஆகிறது விஜய்யின் ‘கத்தி’
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இருவேடங்களில் நடித்த ‘கத்தி’ திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நடித்த கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் அக்சயகுமார் நடிக்கவுள்ளார். சமந்தாவின் கேரக்டருக்காக தீபிகா படுகோனே மற்றும் கரீனா கபூர் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த ஜெகன் இயக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.