தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும்: டிரம்ப் அறிவிப்பு

தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும்: டிரம்ப் அறிவிப்பு

இன்று சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்து பேசிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வால் உலகமே அமைதிப்பாதையில் திரும்பியுள்ளது. இரு தலைவர்களும் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘கொரிய போரை நிறுத்தும் விதமாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என்றும், வடகொரியாவின் முக்கிய ஏவுகணை சோதனை மையத்தை அழிக்க கிம் ஜாங் உன் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் போரை யார் வேண்டுமானாலும் முன்னெடுக்க முடியும், ஆனால் துணிவு மிக்கவர்களால் மட்டுமே அமைதியை விரும்ப முடியும் என்று கூறிய டிரம்ப், \சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு மிகுந்த பயனளிப்பதாக இருந்ததாக குறிப்பிட்டார்.

Leave a Reply