ஹேர் டிரையர், ஸ்ட்ரெயிட்னரை வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டிய அம்சங்கள்

ஹேர் டிரையர், ஸ்ட்ரெயிட்னரை வாங்கும்போது நினைவில் கொள்ளவேண்டிய அம்சங்கள்
hair dryer
‘‘ஹேர் டிரையரில் இரண்டு வகைகள் உண்டு. டிரையர் மட்டும் கிடைப்பது ஒரு வகை, டிரையருடன் ஸ்ட்ரெயிட்னரும் சேர்த்துக் கிடைப்பது மற்றொரு வகை. தரமான பிராண்ட் அயிட்டங்கள் 670 ரூபாய் முதல் கிடைக்கின்றன. இரண்டு வருடங்கள் வாரன்டி உண்டு. பிளாஸ்டிக், ஃபைபர் என இரண்டு ரகங்களில் கிடைக்கும். பிளாஸ்டிக் கீழே விழுந்தால் சேதமடையும் என்பதால், ஃபைபரைத் தேர்வு செய்யலாம்.

ஆன்லைன் பர்சேஸில் 150 ரூபாய் முதல்கூட டிரையர் கிடைக்கும். ஆனால், அது தரமற்றதாக இருப்பது டன், சர்வீஸும் கிடையாது. அதில் ஹீட் கன்ட்ரோலர் இருக்காது என்பதால், அதிக ஹீட் வெளியாகும். எனவே, தரமான, பிராண்டட் ஹேர் டிரையர்கள் வாங்குவதே நல்லது.

பாதுகாப்பு டிப்ஸ்…

ஹேர் டிரையரில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளவும். டிரையரைப் பயன்படுத்தும்போது, ஸ்விட்ச் போர்ட்டில் அரைகுறையாக பிளக் ஆகியிருந்தால், உள்ளே இருக்கும் கரன்ட் சர்க்யூட் போர்டு பாதிக்கப்படும் என்பதால், முழுதாக பிளக் ஆகியிருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

ஸ்ட்ரெயிட்னர்

ஸ்ட்ரெயிட்னரில்  மூன்று மாடல்கள் இருக்கின்றன. ஸ்ட்ரெயிட்னிங் மற்றும் கர்ளிங் செய்வது போல் ஒரு செட். மற்றொரு மாடலில் சில கோம்ப் (சீப்பு) அட்டாச்மென்ட்கள் இருக்கும். கர்ள் மட்டும் செய் வதற்கு கர்ளர் மட்டும் தனியாவும் கிடைக்கிறது. விலை 840 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. இரண்டு வருட வாரன்டி உண்டு.

பாதுகாப்பு டிப்ஸ்…

வறண்ட கூந்தலுக்கு ஸ்ட்ரெயிட் னர் பயன்படுத்தும்போது சூட்டி னால் கேசம் உடைந்துவிடக்கூடும் என்பதால் தவிர்க்கவும். தலையில் ஈரம் சொட்டச் சொட்ட ஸ்ட்ரெயிட் னர் பயன்படுத்த வேண்டாம். கேசத்தில் சிறிது ஈரத்தன்மை இருந்தால் போதும். அதேபோல, கேசத்தில்தான் தண்ணீர் தடவ வேண்டுமே தவிர, மெஷினில் கூடாது. ஸ்ட்ரெயிட்னரில் இருக்கும் செராமிக் ப்ளேட்டில் அதிக நேரம் முடியை வைத்துத் தேய்த்தால், அளவுக்கு அதிகமான சூட்டில் முடி பொசுங்கிவிடலாம் ஜாக்கிரதை. பயன்படுத்தி முடித்த பின், சூடு நீங்கியவுடன் எடுத்துவைக்கவும்.’’ என்றார் நிசாம்.

கேசம்… கரன்ட்… கவனம்!

வெப்பம் உமிழும் டிரையர் மற்றும் ஸ்ட்ரெயிட்னர் எலெக்ட்ரானிக் சாதனங் களை கேசத்துக்குப் பயன் படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங் களைச் சொல்கிறார், அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

“முதலில் நல்ல பிராண்ட் மெஷின் வாங்குவது முக்கியம். டிரையரைப் பொறுத்தவரை பார்லரில் 1,500 முதல் 2,000 வாட்ஸ் வரை பயன்படுத்துவார்கள். என்றாவது ஒருநாள் என்றால் இது ஓ.கே… ஆனால், வீட்டில் அடிக்கடி பயன்படுத்தும்போது 400 வாட்ஸ் தாண்டாமல் இருப்பது நல்லது.  

டிரையர் தேர்வு செய்யும்போது வார்ம், ஹாட், கூல் என மூன்று செட்டிங்குகள் இருப்பதாகப் பார்த்து வாங்கவும். குளிர் பருவநிலையில் ஹாட் மற்றும் வார்ம் மோடு செட் செய்து பயன்படுத்தலாம். வெயில் காலங்களில் கூல் மோடு செட் செய்து பயன்படுத்தலாம்.

தெர்மோ ஸ்டார்ட் ஆப்ஷன் இருக்கும் மெஷின் சிறந்தது. இதனால், ஹீட் கூடிக்கொண்டே போகாமல், நாம் செட்செய்த அளவு சூடானதும் மேலும் சூடேறுவது நின்று, அதே வெப்பத்தில் வேலைசெய்யும்.

தலைமுடியை டவலால் ஈரம்போக துடைத்துவிட்டு, பின்னர் டிரையர் பயன்படுத்தவும். முடியின் வேர்ப்பகுதிக்கு டிரையர் போடும்போது கூல் மற்றும் வார்ம் மோடு ஓ.கே! ஹாட் மோடு தவிர்க்கவும். அயர்ன், கர்ள் செய்யும்போது முடியின் வேருக்கு 10 செ.மீ இடைவெளிவிட்டே சாதனத்தைப் பயன்படுத்தவும்.

அடிக்கடி ஹேர் ஸ்ட்ரெயிட்னிங், அயர்னிங் செய்யும்போது கேசம் வறண்டு, முடி உதிர்வு ஏற்படுவதுடன் முடியின் வேரும் வலுவிழந்து பாதிக்கப்படலாம். எனவே, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என இதை லிமிட் செய்துகொள்ளலாம்.

டிரையர், ஸ்ட்ரெயிட்னர், கர்ளர் பயன்படுத்துவதற்கு முன் கேசத்தில் தடவிக்கொள்ள வேண்டிய ஸ்பிரே, லோஷன், க்ரீம் போன்ற தெர்மல் ஸ்டைலிங் பொருட்கள் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தும்போது, இந்த சாதனங்களின் வெப்பத்தால் முடிக்கு ஏற்படும் பாதிப்பு குறையும். எனவே, அயர்னிங், கர்ளிங் என்று என்ன விதத்தில் ஹேர் செட் செய்ய வேண்டுமோ, அதற்கேற்ற ஸ்பிரே, லோஷனை அப்ளை செய்யவும். குறிப்பாக, இதில் ஸ்பிரே டைப் உபயோகிக்க சுலபமாக இருக்கும்’’ என்கிறார் வசுந்தரா.

Leave a Reply