30 வருடங்களாக வெளிவந்த பிரிட்டன் நாளிதழ் நேற்றுடன் நிறுத்தம்.

30 வருடங்களாக வெளிவந்த பிரிட்டன் நாளிதழ் நேற்றுடன் நிறுத்தம்.

independentபிரிட்டன் நாட்டின் முன்னணி நாளிதழாக இருந்து வந்த ‘தி இண்டிபெண்டண்ட்’ என்ற நாளிதழ் நேற்றுடன் தனது பதிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பரபரப்புடன் வெளிவந்து கொண்டிருந்த இந்த நாளிதழ் இனிமேல் இணையத்தில் மட்டுமே செயல்படும் என்றும் பேப்பர் வடிவில் இன்று முதல் வெளிவராது என்றும் அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

வளர்ந்து வரும் இணையவுலகில் இணையத்திலேயே அனைத்து செய்திகளும் உடனுக்குடன் பொதுமக்களை போய் சேர்ந்துவிடுகிறது. மேலும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டரில் நொடிக்கு நொடி விறுவிறுப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுமே வெளிவரும் பிரிண்டிங் செய்தித்தாளுக்கு நாளுக்கு நாள் மவுசு குறைந்து கொண்டே போகின்றது.

இருப்பினும் கடந்த 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன் நாட்டின் தேசிய செய்தித் தாள் ஒன்று அச்சுப்பதிப்பை நிறுத்துவதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தி இன்டிபென்டண்ட் நாளிதழ் கடந்த 1986ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் மிக வெற்றிகரமான நாளிதழாகவே இருந்துவந்தாலும் சமீப காலமாக இந்த நாளிதழின் விற்பனை மிக மோசமான நிலையில் இருந்து வந்தது. இருப்பினும் இணையதளத்தில் இந்த பத்திரிகைக்கு இன்னும் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே டிஜிட்டல் வடிவ பத்திரிகைக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக இந்த நாளிதழ் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply