சமீபத்தில் சச்சின் என்றால் யார் என்றே தெரியாது என்று கூறி சமூக வலைத்தளத்தில் வாங்கிக்கட்டி கொண்ட மரியா ஷரபோவை தொடர்ந்து தமிழ்ப்பெண் ஒருவர் ரஜினிகாந்த் என்றால் யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த பெண் மீது யாரும் கோபப்படாமல் அனுதாப்பட்டார்கள் என்பதுதான் ஆச்சரியம்.
சமீபத்தில் ரஜினிகாந்த் தனது பண்ணை வீட்டிற்கு சென்றார். அப்போது பண்ணை வீட்டின் எதிரே உள்ள மரத்தடியில் ஒரு வயதான பெண் ஆதரவின்றி அனாதையாக படுத்திருந்ததை கண்டார். உடனடியாக காரில் இருந்து இறங்கி, அந்த முதிய பெண் அருகே சென்று அவரை பற்றி விசாரித்தார்.
தனக்கு வயதாகிவிட்டதால் தன்னை தன்னுடைய பிள்ளைகள் வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள் என்றும், தனக்கு வேறு புகலிடம் இல்லாததால் இந்த மரத்தடியில் அனாதையாக இருப்பதாகவும் கூறினார். உடனே கண்கலங்கிய ரஜினிகாந்த் போன் முலம் முதியோர் இல்லம் ஒன்றை தொடர்பு கொண்டு உடனடியாக அந்த பெண்ணை முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவினார். அதற்கு தேவையான பணம் முழுவதையும் அவரே கொடுத்துள்ளார்.
இதுகுறித்து முதியோர் இல்ல நிர்வாகிகள் ரஜினிகாந்த் தான் உங்களை எங்கள் இல்லத்தில் சேர்க்க உதவி செய்ததாக கூறியபோது, ‘ரஜினிகாந்த் என்றால் யாரென்று எனக்கு தெரியாது. ஆனாலும் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என அப்பாவியாக கண்கலங்கி சொன்னபோது முதியோர் இல்ல நிர்வாகிகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.