இதெல்லாம் தேவையில்லை என்பதை கற்று கொடுத்துள்ளது கொரோனா!

கொரோனாவுக்கு நன்றி

உலகில் உள்ள மனித இனத்தையே ஆட்டுவித்து கொண்டிருக்கும் கொரோனா, மனித உயிர்களை ஏராளமாக பலிவாங்கி வந்தாலும் மனிதர்களுக்கு சில அற்புதமான பாடங்களை கற்று கொடுத்துள்ளது.

ஒரு திருமணம் நடத்த ஆயிரக்கணக்கானோர்களை கூட்டி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதன் தேவை இல்லை என்பதையும் 10 பேர் போதும் என்பதையும் கற்று கொடுத்துள்ளது.

திரையரங்குகள், மால்கள், பொழுதுபோக்கு மையங்கள், ஆகியவை மக்களின் அத்தியாவசிய தேவை இல்லை என்பதை சொல்லி கொடுத்துள்ளது.

ஒவ்வொருவரும் முடிவெட்டுவது எப்படி என்பது அனைவருக்கும் தெரிய வேண்டியதன் அவசியத்தி க்ற்று கொடுத்துள்ளது.

நேரக்கணிப்பு, ஜாதகம், ராசிபலன், ஆகியவை தேவையே இல்லை என்பதை கற்று கொடுத்துள்ளது.

80% நோய்களுக்கு மருத்தவமனை செல்லத் தேவையில்லை என்பதை கற்று கொடுத்துள்ளது.

மாதம் 10000 இருந்தால் மூன்று அல்லது நான்கு பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் செலவுக்கு போதும் என்பதை கற்று கொடுத்துள்ளது.

சேமிப்பின் முக்கியத்துவத்தி அனைவருக்கும் கற்று கொடுத்துள்ளது.

டாஸ்மாக் கடை இல்லாமல் அரசு இயங்க முடியும் என்பதையும் மக்கள் வாழமுடியும் என்பதையும் கற்று கொடுத்துள்ளது.

Leave a Reply