சென்னையை நோக்கி மீண்டும் புயலா?

சென்னையை நோக்கி மீண்டும் புயலா?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இது வட தமிழகம் மற்றும் தென் தமிழகம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதனால் சென்னைய்யில் மீண்டும் ஒரு கனமழையை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் வழக்கம்போல் இந்த காற்றழுத்தமும் ஆந்திரா நோக்கி நகர்வதாக பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் வடதிசையில் நகர்ந்து மசூலிப்பட்டினம் அருகே நிலை கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply