விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்திற்கு தடையா?
பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காளி’ படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அண்ணாதுரை படத்தின் விநியோக உரிமையை பெற்ற அலெக்சாண்டர் என்பவருக்கு அப்படத்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும், இந்த நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள காளி படத்தை குறைந்த விலைக்கு தந்து அதை வைத்து கடனை அடைத்துக் கொள்ளுங்கள் என விஜய் ஆண்டனியும், அவரின் மனைவி பாத்திமாவும் தன்னிடம் கூறியதாகவும், இதற்காக தான் ரூ.50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டதாகவும், ஆனால் எதிர்பாராத வகையில் மீதிப்பணத்தை செலுத்த முடியாததால் படத்தின் உரிமை கைமாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே எனக்கு அண்ணாதுரை படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்து விட்டு காளி படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும்.’ என நீதி மன்றத்தில் அலெக்ஸாண்டர் வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து வரும் ஏப்ரல் 11ம் தேதிக்குள் 4 கோடியே 73 லட்சத்தை நீதிமன்றத்தில் விஜய் ஆண்டனி செலுத்தி விட்டு காளி படத்தை ரீலீஸ் செய்ய வேண்டும். இல்லை என்றால் தடை தொடரும்.’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.