80 அடி உயர ரயில்பாலத்தில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் நூலிழையில் உயிர் பிழைத்த அதிசயம்.

railway bridgeஅமெரிக்காவில் உள்ள இண்டியானா என்ற மாகாணத்தில் 80 அடி உயர ரயில்வே பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் திடீரென ரயில் பின்புறமாக வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள்  இருவரும் ரயில்வே தண்டவாளத்தில் தற்செயலாக கீழே விழுந்ததால் நூலிழையில் உயிர் தப்பினர்.

railway bridge 1
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் ஷப்பில் க்ரீக் டிரெஸ்டில் என்ற ரயில்வே பாலம் ஆற்றின் குறுக்கே 80 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். பாதி தூரம் சென்றவுடன் திடீரென பின்புறமாக ரயில் ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரயில் வருவதற்கு முன் பாலத்தை கடந்துவிட இருவரும் அவசரமாக ஓடினார்கள். ஆனால் ரயில் மிக அருகில் வந்துவிட்டதால் பதட்டத்தில் இருவரும் தண்டவாளத்தில் கீழே விழுந்துவிட்டனர்.

ரயில் டிரைவர் தண்டவாளத்தில் இரண்டு பெண்கள் ஓடுவதைப் பார்த்து பிரேக் போட்டார். ஆனால் ரயில் உடனடியாக நிற்கவில்லை. ரயில் இரண்டு பெண்களையும் கடந்து சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இதுகுறித்து விசாரணை செய்த இண்டியானா போலீஸார் இரண்டு பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் ரயிலில் உள்ள கேமராவில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை தற்போது பார்க்கலாம்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1o1V3n4″ standard=”http://www.youtube.com/v/goFcYEKCuEU?fs=1″ vars=”ytid=goFcYEKCuEU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7849″ /]

Leave a Reply