உலகின் மிக விலை மதிப்புள்ள பள்ளம் இதுதான்
கிழக்கு சைபீரியாவில் உள்ள வைரச்சுரங்கம் உலகின் மிகப்பெரிய செயற்கை பள்ளமாக கருதப்படுகிறது. வைரங்கள் தோண்டுவதற்காக இந்த பகுதியில் இதுவரை 1,722 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தின் அகலம் சுமார் 1 மைல் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பள்ளத்தை தோண்டுவதற்கு இதுவரை $15 பில்லியன் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவே உலகில் மிக அதிகம் செலவு செய்து தோண்டப்பட்ட பள்ளம் என்றும் கூறப்படுகிறது. இந்த வைரச்சுரங்கத்தில் இருந்து விலைமதிப்புடைய வைரங்கள் கிடைத்து வருவதாகவும் அவற்றின் மதிப்பு பல பில்லியன்கள் இருக்கும் என்றும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சுரங்கத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வழியாக ஹெலிகாப்டர்கள் சென்றால் அழுத்தம் காரணமாக அவை விபத்துக்குள்ளாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் இந்த தடை என்று கூறப்படுகிறது.