உலகின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியல். பிரதமர் மோடிக்கு 15வது இடம்.

putin and modiஅமெரிக்காவின் பிரபல இணையதளமான போர்ப்ஸ் (Forbes) என்ற இணையதளம் உலகின் மிக சக்திவாய்ந்தவர்கள் பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் முதல் இடத்தையும் அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் 15வது இடத்தில் உள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்தவர் பட்டியலில் இருந்து முதல்முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் பரபரப்பாக செயல்பட்டு உலகையே தன்பக்கம் திருப்பிய ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்திய அளவில் பிரதமர் மோடி 15வது இடத்தையும், தொழிலதிபர் முகேஷ் அம்பானி 36வது இடத்தையும் பிடித்துள்ளனர். வெளிநாட்டு வாழ் இந்தியரான தொழிலதிபர் லட்சுமி மிட்டல் 57வது இடத்தையும், மைக்ரோசாப்ட் சி.இ.ஓவாக பணிபுரியும் இந்தியரான சத்யா நாதல்லா 64வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7வது இடத்தையும், போப்பாண்டவர் 4வது இடத்திலும் உள்ளனர். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் 10வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply