இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் தாயும், மகனும் இரண்டு கைகளில் இன்றி தங்களது வேலை முழுவதையும் காலினாலே செய்து வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 35 வயது லிண்டா பாணன் என்ற பெண்ணுக்கு 9 வயது டிம்மி என்ற மகன் இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லை. ஹால்ட் ஓரம் சிண்ட்ரோம் ( Holt-Oram syndrome) என்ற பிறவிக்கோளாறினால் இவர்கள் பிறக்கும்போதே இந்த குறைபாட்டுடன் பிறந்தார்கள்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் இரண்டு கைகள்தான் இல்லையே தவிர உறுதியான மனம் இருந்தது. பல் துலக்குவது முதல் சாப்பிடுவது, துணி துவைப்பது, கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது, சமையல் வேலைகள் செய்வது என அனைத்தையுமே இவர்கள் இருவரும் காலினால் செய்ய சிறுவயதில் இருந்தே பழகியுள்ளனர். இரண்டு கைகள் உள்ள ஒரு மனிதர் எப்படி வாழ்கின்றனரோ அதேபோல் இவர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. லிண்டா பாணன் என்ற பெண்ணின் குறைபாட்டை பெரிதுபடுத்தாமல் ரிச்சர்ட் என்பவர் இவரை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது ஒரே வருத்தம் தங்கள் மகனுக்கும் இதுபோன்ற ஒரு குறைபாடு இருக்கின்றது என்பதுதான். மற்றபடி இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகின்றனர்.