மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் மாடல் ஸ்மார்ட் போன்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் தற்போது கேன்வாஸ் ஜூஸ் 3 மாடல் ஸ்மார்ட் போன் வெளிவந்திருக்கிறது. இதன் சிறப்பு அம்சமாக பேட்டரி சொல்லப்படுகிறது, ஒரு நாள் பேட்டரியை சார்ஜ் செய்தால் இரண்டு நாளைக்குத் தாக்குப்பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இரட்டை சிம், 3ஜி, வைஃபை, புளுடூத் போன்ற வழக்கமான அம்சங்களைக் கொண்டிருக்கும் இதன் விலை ரூ. 8,769.
இதன் பிற அம்சங்கள்:
திரை: 5 அங்குலம் எச்.டி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்
ராம்: 2ஜிபி
சேமிப்புத் திறன்: 8 ஜிபி. (32 ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளலாம்)
பின்பக்க கேமரா: 8 மெகா பிக்ஸல் எல்இடி ப்ளாஸ் வசதி கொண்டது
முன்பக்க கேமரா: 2 மெகா பிக்ஸல்
பேட்டரி: 4,000 எம்ஏஎச்
குறைந்த விலையில் அசத்தலான கேமரா போன்
மோட்டராலோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மோட்டோ எக்ஸ் ப்ளே என்னும் பெயர் கொண்ட இதன் சிறப்பு அம்சமாக கேமரா பேசப்படுகிறது. ஏனெனில் 21 மெகா பிக்ஸல் கேமராவை இந்த ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது. இதன் விலையோ ரூ. 18,499 தான். 21 எம்.பி. கேமரா கிடைப்பதால் இந்த விலை மிக மலிவு என்கிறார்கள் நிபுணர்கள். இதன் பேட்டரி 30 மணி நேரம் தாங்குமாம். ப்ளிப்கார்ட் இணையதளம் மூலம் இந்த போன் விற்பனைசெய்யப்படுகிறது. சேமிப்புத் திறன் 32 ஜிபி கொண்ட போனின் விலை ரூ.19,999.
இதன் பிற அம்சங்கள்:
திரை: 5.5 அங்குலம் எச்.டி.
ராம்: 2 ஜிபி
சேமிப்புத் திறன்: 16 ஜிபி/32 ஜிபி (128 ஜிபி வரை அதிகரித்துக்கொள்ள முடியும்.)
பின்பக்க கேமரா: 21 மெகா பிக்ஸல்
முன்பக்க கேமரா: 5 மெகா பிக்ஸல்
பேட்டரி: 3630 எம்ஏஎச்
எடை: 169 கிராம்