இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் ரஜினியா? பாஜகவின் பலே கணக்கு

இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் ரஜினியா? பாஜகவின் பலே கணக்கு

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைஒ செய்ய பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த பதவிக்கு அத்வானி பெயர் முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவரது பெயர் இந்த பட்டியலில் இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக நடிகர் ரஜினிகாந்தை குடியரசு தலைவராக தேர்வு செய்ய ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக.

மேலும் ரஜினிகாந்தை குடியரசு தலைவர் பதவிக்கு நிறுத்தினால் எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்பதும் பாஜகவின் கணக்காக உள்ளது. இதற்கு ரஜினி சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply