டியோடரண்ட் பயன்படுத்துவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!

deo

மனிதருக்கு வியர்ப்பது என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் எப்போதுமே வியர்வை வாசனையானது உடலில் வீசினால், நம் அருகில் இருப்போர் நம்முடன் இருக்கும் போது அசௌகரியத்தை உணர்வார். ஆகவே வியர்வை நாற்றத்தை தவிர்க்க பல வழிகள் இருந்தாலும், அதில் முக்கியமான ஒன்று டியோடரண்ட் என்னும் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவது.

தற்போது பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தம்மீது நறுமணம் வீச வேண்டுமென்று டியோடரண்ட்டைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் அப்படி பயன்படுத்துவதால், நம்மீது நறுமணம் வீசுவதுடன், அதில் உள்ள கெமிக்கல்களால் நமக்கு ஒருசில தீமைகளையும் விளைவிக்கிறது. இங்கு டியோடரண்ட் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அதிக அளவில் டியோடரண்ட் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

சரும அலர்ஜி
பெரும்பாலான டியோடரண்ட்டுகளில் சருமத்தை வறட்சியடையச் செய்யும் எத்தனால் இருக்கிறது. இப்படி சருமத்தில் வறட்சி அதிகரித்தால், அவை சருமத்தில் அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். அதிலும் இதனை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்தால், அவை சரும அலர்ஜியை தீவிரமாக்கிவிடும்.

கறைகள்
டியோடரண்ட்டுகள் துணிகளில் கறைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அடர் நிற உடைகளில் தான் கறைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, வெளிர் நிற உடைகளிலும் கறைகளை ஏற்படுத்தும். மேலும் இப்படி டியோடரண்ட்டுகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால், துணிகளில் படியும் கறைகளைப் போக்குவது என்பது கடினமாகிவிடும்.

அல்சைமர் அல்லது ஞாபக மறதி
நிறைய டியோடரண்ட்டுகளில் ஞாபக மறதியைத் தூண்டும் அலுமினிய உப்புக்கள் நிறைந்துள்ளது. அதே சமயம் சில ஆய்வுகள் டியோடரண்ட்டுகளில் உள்ள அலுமினிய உப்புக்கள் மறதியை ஏற்படுத்துவதில்லை என்றும் கூறுகிறது. எதுவாக இருந்தாலும், டியோடரண்ட்டினால் ஞாபக மறதி வரும் வாய்ப்பு இருப்பதால், அதனை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

பிறப்பு குறைபாடுகள்
குழந்தைகள் டியோடரண்ட்டுகளை அதிகம் பயன்படுத்தினால், சிறுவதிலேயே பருவத்தை எட்டும் வாய்ப்பு உள்ளது. மேலும் கர்ப்பிணிகள் இதனைப் பயன்படுத்தினால், அவை வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும்.

மார்பக புற்றுநோய்
டியோடரண்ட்டுகளை பெரும்பாலும் அக்குளில் அடிப்பதால், அக்குளுக்கு அருகில் உள்ள மார்பக திசுக்களானது டியோடரண்ட்டில் உள்ள ஈஸ்ட்ரோஜெனிக் என்னும் கெமிக்கல்களால் பாதிக்கப்படும். அதிலும் ஈஸ்ட்ரோஜெனிக் என்னும் பொருள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து, மார்பகத் திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். இப்படி மார்பக திசுக்களானது அளவுக்கு அதிகமாக வளரும் போது, இவை மார்பக புற்றுநோயை உண்டாக்கிவிடும்.

Leave a Reply