கனிமொழியில் குற்றச்சாட்டு நியாமானதா? டுவிட்டரில் கேள்வி கேட்கும் பொதுமக்கள்
ஸ்டிக்கர் அடிக்க நேரம் இருந்த தமிழக அரசுக்கு ரேஷன் கார்டு அடிக்க நேரமில்லையா என்று திமுக தலைவரும் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி நேற்று கோவையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். கனிமொழி ஒரு விஷயத்தை மறந்துவிட்டு பேசுவதாக டுவிட்டரில் பலர் கனிமொழியின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்துள்ளனர்.
உண்மையில் தமிழகத்தில் ரேசர் கார்டு காலாவதியானது கடந்த 2006ஆம் ஆண்டு என்பது அனைவருக்கும் தெரியும். 2006ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரை புதிய ரேஷன் கார்டு கொடுக்காமல் தாள் ஒட்டும் முறையை தொடக்கியதே திமுக ஆட்சிதான். ஐந்து ஆண்டுகளாக தாள் ஒட்டி ஆட்சி செய்து வந்தது கனிமொழியின் தந்தைதான் என்பதை அவருக்கு யாராவது ஞாபகப்படுத்துங்கள் என்று டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் ஜெயலலிதா படிப்படியாக மதுக்கடைகளை ஒழிக்க மாட்டார் என்றும் காரணம், அவரால் நடத்தப்படும் மிடாஸ் மது ஆலைக்கு வருமானம் போய்விடும் என்றும் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். அதேசமயம் திமுகவின் மது ஆலைகளை ஆட்சிக்கு வந்த பின்னர் மூடிவிடுவோம் என்றும் கூறியுள்ளார். ஒருவேளை ஆட்சிக்கு வராவிட்டால் மது ஆலைகளை மூட மாட்டோம் என்பதுதான் இதன் பொருள். ஆட்சிக்கு வந்தால் மது ஆலைகளை மூடுவேன் என்று வாக்குறுதி கொடுப்பவர் இப்பவே மது ஆலைகளை மூடி ஒரு முன்னுதாரணமாக இருந்தால் அவர் மீதும் அவரது கட்சி மீதும் நம்பிக்கை வரும். அதை செய்வாரா கனிமொழி என்று டுவிட்டரில் பலர் கேள்வி கேட்டுள்ளனர்.
மக்களை ஐந்து ஆண்டுகளாக நேரடியாக சந்திக்காதவர் ஜெயலலிதா என்று கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது எந்த பொதுமக்கள் அவரை சந்தித்தனர். நடிகைகளின் திருமணத்திற்கும், தனக்குத்தானே நடத்தி கொண்ட பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவுக்கு, மானாட மயிலாட ஆடுபவர்களுக்கு மார்க் போடும் நிகழ்ச்சியில்தானே இவரும் கலந்து கொண்டார். முதல்வராக இருந்தபோது ஒருமுறையாவது மக்களை நேரில் சந்தித்தாரா கருணாநிதி என்று கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.
இதற்கெல்லாம் கனிமொழி அடுத்த கூட்டத்தில் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.