தலையில் கொம்புடன் பிறந்த அபூர்வ குழந்தை

தலையில் கொம்புடன் பிறந்த அபூர்வ குழந்தை

மணிலாவில் உள்ள தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை தலையில் கொம்புடன் பிறந்துள்ளது.

கர்ப்பத்தில் இருக்கும்போதே தலையில் உள்ள கொம்பு போன்ற கட்டியை டாக்டர்கள் கவனிக்க தவறியதால் பிறக்கும்போது அந்த குழந்தையை பார்த்து பெற்றோர்களும், மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அறுவை சிகிச்சை செய்து தலையில் உள்ள கட்டி போன்ற கொம்பை அகற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறியும், அந்த குழந்தையின் பெற்றோர்கள் ஏழு மாதம் கழித்தே தற்போது அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். பொருளாதார பிரச்சனையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மணிலா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றிவிட்டதாகவும் இன்னும் ஒருசில நாட்களில் அந்த குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply