அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது அஜீத் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்ததோடு பலவித சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.
அஜீத்தின் என்னை அறிந்தால் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக ‘ஐ’ படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் தென்மாநிலத்தில் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ள ஒரு முக்கிய விஐபி அஜீத் படக்குழுவினர்களை மிரட்டி ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததாக இன்று காலை முதல் டுவிட்டரில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாமல் அஜீத் ரசிகர்கள் அந்த முக்கிய நபரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் என்னை அறிந்தால் படக்குழுவினர் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிய இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால்தான் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் எவ்வித கற்பனை தகவல்களையும் யாரும் அளிக்கவேண்டாம் என்றும் விளக்கம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் டுவிட்டரில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.