சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் மூத்த சகோதரர் சரத் சந்திர போஸின் மகன் அமியா நாத் அவர்களின் மனைவி மரணம் அடைந்ததாக அவருடைய குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமியா நாத், அவர்களின் மனைவி ஜோத்சனா போஸ் என்பவர் வயோதிகம் காரணமாக மரணம் அடைந்துவிட்டார் என்றும் அவருக்கு வயது 90 என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. மரணம் அடைந்த ஜோத்சனாவின் உடல் நேற்று இறுதி மரியாதை செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமியா நாத் புகழ்பெற்ற வழக்கற்ஞராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.