சந்தேகங்களை அதிகரிக்கும் விளக்கங்கள். என்ன நடந்தது ஜெயலலிதா சிகிச்சையில்?

சந்தேகங்களை அதிகரிக்கும் விளக்கங்கள். என்ன நடந்தது ஜெயலலிதா சிகிச்சையில்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பவர்கள் மேலும் சந்தேகம் அளவுக்கு தகவல்களை கொடுத்து கொண்டிருப்பதால் அவருடைய மரணம் குறித்த சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் அளித்து வரும் பதிலிலும் எந்த தெளிவான பதிலும் கிடைக்கவில்லை. சந்தேகங்களைத்தான் கிளப்புகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசின் சார்பில் அப்பல்லோ மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில், ஜெயலலிதாவுக்கு கிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகும்போது ஜெயலலிதா சுயநினைவுடன்தான் இருந்தார் என்று ரிச்சர்டு ஜான் பீலே தெரிவித்து இருந்தார். ஆனால், நேற்று எய்ம்ஸ் வெளியிட்ட 19 பக்க அறிக்கையில், ”மருத்துவமனைக்கு ஜெயலலிதா வரும்போது, மயக்க நிலையில்தான் இருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டு பதில்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது.

அதேபோல் அவருக்கு வைக்கப்பட்டு இருந்த உயிர்காக்கும் கருவியை எடுக்க உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. அவருடனே எப்போதும் இருக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையினர் எங்கே சென்றனர். அவர்களை வாபஸ் பெற்றது யார்? ஏன் அவர்கள் அப்பலோ மருத்துவமனைக்கு வரவில்லை. முதல்வருக்கு என்று இருக்கும் ஆம்புலன்சை பயன்படுத்தாமல், ஏன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் பதில் இல்லை.

இந்தக் கேள்விகளும், பதிலும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பதால், விசாரணைக் கமிஷன் கோரி நாளை தமிழகம் முழுவதும் பன்னீர் செல்வம் அணி உண்ணாவிரதம் இருக்கிறது. அப்போது, மேலும் சில கேள்விகளை இவர்கள் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply