பாரசிட்டமால் மருந்தை அதிகம் எடுத்துக்கொள்வதால் வரும் ஆபத்து

521c89f5-e17c-48c4-b715-26a7bd47cee4_S_secvpf

பாரசிட்டமால்’ மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பின்னாளில், ஆஸ்த்மா, அலர்ஜி உள்ளிட்டவை ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓட்டாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி ஜூலியன் கிரேன், அலர்ஜி ஏற்படும் விதம் குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டார்.

கிரைஸ்ட்சர்ச் நகரத்தைச் சேர்ந்த 505 குழந்தைகளிடமும், 914 சிறுவர்களிடமும் இந்தஆய்வை நடத்தினார்.

காய்ச்சலுக்கு உட்கொள்ளும் மருந்தான பாரசிட்டமாலை அதிகம் குழந்தைகளுக்குக் கொடுத்தால், பின்னாளில் அவர்களுக்கு ஆஸ்த்மா, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடித்தார்.

இது குறித்து ஜூலியன் கூறியதாவது, குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போது பரசிட்டமால் மருந்தை அதிகம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால், அது குழந்தைகளுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான மருத்துவ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

என்னுடைய ஆய்வில், குழந்தைகளுக்கு அதிகமாக பாரசிட்டமாலை தரும்போது, பின்னாளில் ஆஸ்த்மா, அலர்ஜி உள்ளிட்டவை ஏற்படும் அறிகுறிகள் தெரிய வந்துள்ளன என சொல்கிறார் ஜூலியன்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவிதமான பாரசிட்டமால் சிரப்பையோ, மாத்திரையையோ குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என்று ஜூலியன் தன் ஆய்வு முடிவில் கூறியுள்ளார்.

பாரசிட்டமால் மாத்திரையை குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அடிக்கடி மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்க கூடாது.

சிலர் எதற்கெடுத்தாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பாரசிட்டமால் மாத்திரையை மருந்தகங்களில் வாங்கி உபயோகிப்பர். இவ்வாறு செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பணிகளில் காணப்படும் மன அழுத்தம், வேலை காரணமாக அதிகம் வெளியில் அலைவதால் சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. இவர்கள் மருத்துவரிடம் செல்லாமல் மருந்தகங்களில் அவசரத்திற்க்கு ஏற்றார்போல் பாரசிட்டமால் மாத்திரையை வாங்கி போட்டு நிவாரணம் அடைகின்றனர்.

அடிக்கடி தலை வலி வந்தால் மருத்துவரிடம் காண்பித்துதான் மாத்திரை போட வேண்டும். தொடர்ந்து பாரசிட்டமால் மாத்திரை போடுவதால் கல்லீரலைக்கூட பாதிக்கும் என்ற எச்சரிக்கை வாசகம் மாத்திரை கவரிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply