குடலில் ஒட்டுண்ணிகலால் ஏற்படும் ஆபத்துக்கள்

5-remedios-naturales-contra-el-estreñimiento--350x250

குடல் ஒட்டுண்ணிகளானது சுத்தமற்ற உணவுகள், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மூலம் ஒருவரின் உடலினுள் நுழைகிறது. எப்போது ஒருவர் சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் உணவுகளை உட்கொள்கிறாரோ, அவர்களின் உடலில் குடல் ஒட்டுண்ணிகள் நுழைந்திருக்க வாய்ப்புள்ளது. மோசமான சுகாதாரம், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை கூட ஒட்டுண்ணிகளின் தாக்கத்தை அதிகரிக்கும். ஒருவரின் உடலில் ஒட்டுண்ணிகள் தாக்கினால், அது அருகில் உள்ளோரை எளிதில் தாக்கும்.

குடல் ஒட்டுண்ணிகள் உடலை தாக்கிவிட்டால், அவை நம் குடலை ஆக்கிரமித்து குடிப்புகுந்துவிடும். மேலும் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தால் அந்த ஒட்டுண்ணிகளை அழிக்க முடியாது. இருப்பினும் நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலம், அதனை எதிர்த்துப் போராடும் போது, அதனால் நம் உடலினுள் காயங்கள் ஏற்படக்கூடும்.

குடல் ஒட்டுண்ணிகள் நம் குடலைத் தாக்கியிருந்தால், அதனை ஒருசில அறிகுறிகளின் மூலம் அறியலாம். அவை எடை குறைவு, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, ஆசன வாய் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் அரிப்புடன் எரிச்சல், இரத்தக்கசிவுடன் மலம் வெளியேறுவது, வயிற்றுப்போக்கு, களைப்பு, மன இறுக்கம், வாய்வுத் தொல்லை, தசை வலி, மூட்டு வலி, இரத்த சோகை, இரத்த சர்க்கரையில் ஏற்றத்தாழ்வு, பாலுணர்ச்சி குறைபாடு போன்றவை.

உங்களுக்கு குடல் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால், மலப் பரிசோதனை செய்து பார்க்கலாம். அப்படி பரிசோதனை செய்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலமும் குடல் ஒட்டுண்ணிகளை முற்றிலும் அழித்து வெளியேற்றலாம்.

குடல் ஒட்டுண்ணிகளை இயற்கை வழியில் அழிப்பது எப்படி?

* தினமும் உணவில் பூண்டுகளை அதிகம் சேர்த்து வருவதன் மூலம் குடல் ஒட்டுண்ணிகளை அழிக்கலாம்.

* வாரம் ஒருமுறை பப்பாளி விதைகளை உட்கொள்வதன் மூலம் குடல் ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியைத் தடுத்து அழிக்கலாம்.

* கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் தடுக்கலாம்.

Leave a Reply