அமெரிக்க போட்டோகிராபர் ஒருவர் உலகின் பல முக்கிய நகரங்களில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களின் உச்சியில் மிகவும் ஆபத்தான போஸ்கள் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
உலகின் மிக உயரமான கட்டிடங்களின் உச்சியில் ஆபத்தான இடங்களில் ஒரு பெண்ணை நிற்கவைத்து பார்ப்பவர்களை பயமுறுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது அமெரிக்க கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை பார்வையாளர்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை எடுத்தவர் புகைப்படக்கலைஞர் Jun Ahn என்பவர். இவர் இந்த புகைப்படங்களுக்காக நியூயார்க்,ஹாங்காங்,லண்டன்,சுவிட்சர்லாந்து,சியோல், ஆஸ்திரேலியா,ஜப்பான் போன்ற நகரங்களுக்கு தன்னுடைய மாடலையும் அழைத்துக்கொண்டு சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். இனி அந்த புகைப்படங்களை பார்ப்போம்.