சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 4 வரை ராய்ப்பூர், மொகாலி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் 6வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெற மொத்தம் 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
1. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா)
2. டால்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
3.பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா)
4.சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா
5.கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்தியா)
6.கேப் கோப்ராஸ் (தென் ஆப்பிரிக்கா),
7.ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா),
8.பார்படோஸ் டிரைடென்ஸ் (மேற்கிந்திய தீவு)
செப்டம்பர் 13 முதல் 16 வரை நடைபெறும் தகுதி சுற்றுகாளில் லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்), மும்பை இந்தியன்ஸ்(இந்தியா), நார்த்தன் நைட்ஸ் (நியூசிலாந்து), சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை) ஆகிய அணிகள் விளையாடுகின்றன. இதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகளோடு சேர்த்து மொத்தம் 10 அணிகள் சாம்பியன் லீக் போட்டியில் பங்கு கொள்கின்றன.
சாம்பியன் லீக் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, நெஹரா, மிதுன் மன்ஹாஸ், அஸ்வின், ஈஸ்வர் பாண்டே, பவான் நெஜி, ரவீந்திர ஜடேஜா, மொகித் ஷர்மா, வெய்ன் சுமித், வெய்ன் பிராவோ, ஜான் ஹேஸ்டிங்ஸ், பிரன்டன் மெக்கல்லம், சாமுவேல் பத்ரீ, பாப் டுபிளிஸ்சிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.