ஒலிமாசு பட்டியலில் மசூதி: 6ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தால் சர்ச்சை
6ஆம் வகுப்பு பாட புத்தகத்தில், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டியலில் இஸ்லாமியர்களின் மசூதி இடம் பெற்றுள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.
ஐ.சி.எஸ்.இ., என்ற இந்திய சான்றிதழ் இடைநிலை கல்வி வாரியத்தின் 6ஆம் வகுப்பு பாட புத்தகத்தில், ஒலி மாசு ஏற்படுத்துபவை எவை எவை என்பது குறித்து ஒரு பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரயில், கார், பஸ், விமானம் உள்ளிட்டவைகளுடன், மசூதி படமும் உள்ளது. இது சமூகவலை தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஐ.சி.எஸ்.இ., தலைவர் கூறுகையில்: இந்த பாட புத்தகத்தை எங்கள் வாரியம் வெளியிடவில்லை. தனியார் வெளியீட்டு நிறுவனம் தான் இதற்கு காரணம். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.
இந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பக உரிமையாளர் ஹேமந்த் குப்தா கூறுகையில், ” ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டியலில் இடம் பெற்ற அந்த படம் உடனடியாக நீக்கப்படும். நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம்; இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்,” என்று கூறியுள்ளார்.