லட்சுமி ராமகிருஷ்ணனின் 2வது படம் தொடக்கம்.

சென்னையில் ஓர் நாள் உள்பட பல திரைப்படங்களில் குணசித்திர நடிகையாக நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன், கடந்த 2012ஆம் ஆண்டு ‘ஆரோகணம்’ என்ற படத்தை இயக்கினார். வசூலில் பெரிய அளவு வெற்றி பெறவில்லை எனினும், படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.

இந்நிலையில் தற்போது புதிய படத்தை தொடங்க லட்சுமி ராமகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் கோ படத்தில் நடித்த பியா மற்றும் இரண்டாவது நாயகி ஸ்ருதி ஹரிஹரன். இவர் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற லூசியா படத்தின் நாயகி ஆவார். தம்பி ராமையா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஆரொகணம் படத்தை தயாரித்த ஏ.வி.அனூப் இந்த படத்தையும் தயாரிக்கிறார். மீஷ்கின் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா, இந்த படத்தின் கேமராமேனாக பணிபுரிகிறார். மேட்லி புளூஸ் என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையமைக்கிறார்.

வருகிற மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், சென்னை, பாண்டிச்சேரி, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply