‘பாகுபலி’யை கட்டப்பா கொலை செய்த சஸ்பென்ஸ் இதுதான்…
இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான திரைப்படம் ‘பாகுபலி’. எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நடித்த இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 600 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது.
இந்த படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தை கண்டிப்பாக பார்ப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார்? என்ற சஸ்பென்ஸை தெரிந்து கொள்ளத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சஸ்பென்ஸ் ராஜமவுலி உள்பட ஒருசிலரை தவிர படக்குழுவினர்களுக்கே தெரியாதாம். ஆனால் தற்போது இந்த ரகசியம் படக்குழுவினர் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. காரணம் பாகுபலியை கட்டப்பா கொலை செய்த காட்சி தற்போது ஐதராபாத்தில் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி படத்தில் 15 நிமிடங்கள் வருவதால் இந்த காட்சியை அணுஅணுவாக ரசித்து ராஜமவுலி படமாக்கியதாகவும், இந்த படப்பிடிப்புக்கு பின்னர் ‘பாகுபலியை கட்டப்பா கொலை செய்த சஸ்பென்ஸ் படக்குழுவினர்களுக்கு தெரிந்துவிட்டாலும் அவர்களிடம் இருந்து வெளியே கசியாது என்று நம்பப்படுகிறது.