ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆளில்லா விமானம் சோதனையில் வெற்றி

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆளில்லா விமானம் சோதனையில் வெற்றி

உலகம் முழுவதும் குறைந்த சேவையில் இணையதளம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் செலுத்திய ஆளில்லா விமானம் சோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மூலமாக இயங்கு அக்யூலா என்ற இந்த ஆளில்லா விமானம் 60,000 அடி உயரத்தில் பறக்க விட வேண்டும் என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் இலக்கு. இருப்பினும் இலக்கை இந்த விமானம் அடையவில்லை என்றாலும் சோதனை ஓட்டத்தில் 3000 அடி உயம் பறந்து சாதனை புரிந்துள்ளது.

போயிங் 737 விமானத்தின் இறக்கைகளின் நீளத்தைப் போன்று ‘அக்யூலா’ ஆளில்லா விமானம் பல மாதங்களுக்கு வானில் நிலை நிறுத்தப்பட்டு லேசர் மூலமாக ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இணைய சேவை அளிக்க வேண்டும் என்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோள் இந்த சோதனை மூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply