27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் – ஒரு பார்வை

27 stars27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் – இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே – லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து – பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.

நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை – உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.

உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும்.

*ஆலயங்களும், அமைவிடங்களும்

*அஸ்வினி – அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திருவாரூரில் இருந்து 30கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டிஉள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒருகி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

*பரணி – அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடுவழியாக காரைக்கால் செல்லும் வழியில்நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.

*கார்த்திகை – அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

*ரோஹிணி – அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்:* காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

*மிருக சீரிஷம் – அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்  தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

*திருவாதிரை – அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

*புனர் பூசம் – அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

*பூசம் – அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

*ஆயில்யம் – அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

*மகம் – அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

*பூரம் – அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

*உத்திரம் – அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்  திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

*ஹஸ்தம் – அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்** *

*இருப்பிடம்:* கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

*சித்திரை – அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்:* மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

*சுவாதி – அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

*விசாகம் – அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்*

*இருப்பிடம்  மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

*அனுஷம் – அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்: *மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

*கேட்டை – அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்*

*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

*மூலம் – அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

*பூராடம் – அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்*

*இருப்பிடம்:* தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது

Leave a Reply