பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!

child1216_3

உங்களது பிள்ளைகள் எப்போதும் இணையத்தில் இருக்கிறார்களா? அதிலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவழிக்கிறார்களா? அதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கும் என்று கவலை படுகிறீர்களா? இனி கவலையே வேண்டாம்!

எப்படி என்கிறீர்களா?

வீட்டில் உள்ள கணினியை, பெரியவர்கள் இல்லாத சமயத்தில் குழந்தைகள் பயன்படுத்துவதும். அல்லது மற்றவர்கள் பயன்படுத்துவதும் தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், குறிப்பிட்ட அந்த வலைதளத்தை குழந்தைகளும் சரி… மற்றவர்களும் சரி… பார்க்காமல் இருக்க நம்மால் அந்த பக்கத்தை பிளாக் செய்ய முடியும். இது பலரும் அறிந்த விஷயம்தான் என்றாலும்.. 100-ல் 95 பேருக்கு எப்படி ஒரு வலை பக்கத்தை பிளாக் செய்வது என்பது இன்னும் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. அப்படிப்பட்டவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான எளிய வழி!

எப்படி பிளாக் செய்வது?

கணினியில் விண்டோஸ் XP-யை பயன்படுத்தி மிக எளிதில் ஒரு பக்கத்தை எந்தவொரு செலவும் இல்லாமல் சுலபமாக பிளாக் செய்யமுடியும். அதற்கு முதலில் ‘மை கம்ப்யூட்டரில்’ (My Computer) விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு செல்லவேண்டும். பின், WINDOWS\system32\drivers\etc என்ற வழியில் சென்று அங்குள்ள  hosts என்ற கோப்பை இரண்டு முறை கிளிக் செய்து  அதை Notepad-ல் திறக்க வேண்டும்.

 பின், அதில் உள்ள கடைசி வரிக்குச் சென்று அங்குள்ள ‘127.0.0.1 localhost’ என்ற வரிக்கு அடுத்த வரியாக ‘127.0.0.2  http://www.sitename.com’ (இதில் நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் பக்க முகவரியை கொடுக்க வேண்டும்) என டைப் செய்து.. அந்த பக்கத்தை சேமித்து மூடவிடவும். ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை பிளாக் செய்ய விரும்பினால்.. 127.0.0.3 https://www.facebook.com, 127.0.0.4 https://twitter.com…. என்று டைப் செய்து அந்த பக்கத்தை சேமித்து மூடவேண்டும்.

பிறகு உங்களது கணினியை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டும். அதன்பின், நீங்கள் பிளாக் செய்த பக்கத்தை டைப் செய்து பார்த்தால் அந்த பக்கம் ப்ளாக் செய்யப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.

Leave a Reply