சீனா, இந்தியாவை அடுத்து 3வது மிகப்பெரிய மக்கள் தொகை உள்ள நாடு. பிரதமரின் சுவாரஸ்யமான பேச்சு
உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் சீனா மற்றும் இந்தியா என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகின் மூன்றாவது மக்கள் தொகை உள்ள நாடு ஃபேஸ்புக் என்று சுவைபட பாரத பிரதமர் மோடி அமெரிக்காவில் பேசியுள்ளார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று சிலிக்கான் வேலி பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் மற்றும் உயரதிகாரிகளை சந்தித்து உரையாற்றினார். பின்னர் நடந்த டிஜிட்டல் இந்தியா நிகழ்வில் பங்கேற்ற பிரதமர்அந்த கூட்டத்தில் பேசியதாவது,
”இங்கு கூடியுள்ள பலரை ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளேன். ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந்தால் அது தான் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாக திகழ்ந்திருக்கும்.
டுவிட்டர் தளமோ அதனை பயன்படுத்தும் அனைவரையும் ஒரு செய்தியாளன் போல செயல்பட வைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலக்கட்டத்தில் ஒருவர் விழித்திருக்கிறாரா, உறங்குகிறாரா? என்பதை விட ஆன்லைனில் இருக்கிறாரா அல்லது ஆப்லைனில் இருக்கிறாரா? என்பதைதான் முக்கியமாக கவனிக்கின்றனர்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இளம் வாலிபர் இந்தியாவில் உள்ள உடல்நலம் சரியில்லாத தனது பாட்டியுடன் ஸ்கைப் மூலம் தினமும் பேசுகிறார். பெண் குழந்தைகளின் மகத்துவததை உணர்த்த ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தந்தை மகளுடன் செல்ஃபியை அறிமுகப்படுத்தினேன். இதுவெல்லாம் நீங்கள் செய்யும் பணியால் தான் சாத்தியமானது’
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்