ஐ.நா. பொதுச் சபையின் புதிய தலைவராக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மோகென்ஸ் லிக்கெட்ஃப்ட் என்பவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது டென்மார்க் நாட்டின் நாடாளுமன்ற அவைத் தலைவராக பதவி வகித்து வரும் மோகென்ஸ், ஐ.நா சபை உறுப்பினர்களின் எவ்வித எதிர்ப்பும் இன்றி 70-ஆவது ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இவர் இந்த பதவியில் ஒரு ஆண்டு பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள பொதுச் சபைக் கூட்டத்தில் மோகென்ஸ் லிக்கெட்ஃப்ட் புதிய ஐ.நா. சபைத் தலைவர் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா சபையின் தற்போதைய தலைவராக உகாண்டா நாட்டை சேர்ந்த சாம் குடேசா என்பவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.