தீ வைக்கப்பட்ட உன்னாவ் பெண் மரணம்: என்கவுண்டர் எப்போது?
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த உன்னாவ் என்ற பகுதியில் வாழும் 23 வயது பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
ஆனால் சமீபத்தில் அந்த இருவரும் ஜாமீனில் வெளிவந்து பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை மீண்டும் எரித்துக் கொலை செய்யும் நோக்குடன் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தனர்
இந்த தீ விபத்தால் சிக்கிய அந்த பெண் 90 சதவீத தீக்காயங்களால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி உன்னாவ் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து சிறைக்கு சென்ற அந்த இருவர் ஜாமீனில் வெளிவந்து தங்களுடைய கூட்டாளிகள் மூவருடன் சேர்ந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றினர் ஐதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் கைதான 4 பேர் நேற்று என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் தற்போது உன்னாவ் பெண்ணை தீ வைத்து கொளுத்தி கொலை செய்த இந்த ஐந்து பேரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றப்படுவது சாத்தியம்தானா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்