நம்புவதற்கு சற்று சிரமமான ஒரு தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை நேரில் தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. ஒரு வேளை இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதை இங்கே தருகிறேன்.
அந்த வகையில் அகத்தியர் அருளிய பாடலொன்றினை இன்றைய பதிவில் ப்கிர்ந்து கொள்கிறேன். இந்த பாடல் ”அகத்திய பூரண சூத்திரம்” என்ற நூலில் இருக்கிற்து.
“அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு”
– அகத்தியர் –
சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்….
“ஓம் கிலீம் சிவாய நம” என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் அவர்கள் இந்த வழிமுறையை எப்படி அறிந்தாய் எனக் கேட்டால் அகத்தீசர் அருளால் அவர் நூலிலிருந்து அறிந்து கொண்டேன் என்று சொல் என்கிறார்.
நம்புவதற்கு சிரமமான ஒரு தகவல்தானே…!
ஆர்வமும்,விடாமுயற்சியும், குருவருளும் கூடியவர்கள் இதை முயற்சித்துப் பார்க்கலாமே!