இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு சுமார் 62 கிலோ எடையில் கால்கள் மட்டும் இருப்பதால் அவரால் எழுந்து நடமாட முடியாமல் திண்டாடி வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1xcqrDT” standard=”http://www.youtube.com/v/tvfbA-cVSDw?fs=1″ vars=”ytid=tvfbA-cVSDw&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3504″ /]
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 38 வயது பெண் கிளேர் டிக்கிள். இவர் தனது 32வது வயது வரை நார்மலாகத்தான் இருந்தார். பின்னர் இவர் தன்னுடைய உடல் எடையை குறைக்க எடுத்துக்கொண்ட சிகிச்சையில் அலர்ஜி ஏற்பட்டதால் இவருடைய கால்கள் மட்டும் திடீரென பெரிதாகிக்கொண்டே போனது.
இதற்காக இவர் இங்கிலாந்தில் உள்ள பிரபல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் இவருடைய கால்கள் எதனால் பெரிதாகிக்கொண்டே போகின்றது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
தற்போது இவருடைய இரண்டு கால்களின் எடை மட்டுமே 62 கிலோ உள்ளதாகவும், மருத்துவர்கள் தீவிரமாக இவரது நோய் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.