உலகின் மிக நீண்ட தூர புல்லட் ரயில். சீனாவில் நேற்று முதல் இயக்கப்பட்டது

உலகின் மிக நீண்ட தூர புல்லட் ரயில். சீனாவில் நேற்று முதல் இயக்கப்பட்டது

உலகின் மிக நீண்ட தூர புல்லட் ரயில் அதாவது 2,760 கிமீ தூரத்திற்கான புல்லட் ரயில் நேற்று முதல் இயங்கியது. இந்த ரயிலுக்கு உலகப் புகழ்பெற்ற சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள ஷங்ரி-லா என்ற ரிசார்ட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2760 கிமீ ஓடும் இந்த புல்லட் ரயிலின் இரண்டாம் வகுப்புக் கட்டணம் 1,147 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11,227) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் வரை செல்கிறது. இந்த தூரத்தை இந்த ரயில் வெறும் 13 மணி நேரத்தில் கடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ரயிலின் பாதை வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 20,000 கிமீ வரை விரிவாக்கம் செய்யப்படும் என்று சீன ரயில்வே அறிவிட்துள்ளது.

Leave a Reply