உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் குறித்த பட்டியல் ஒன்றை அமெரிக்காவின் பிரபல பத்திரிகை போர்ப்ஸ் சமீபத்தில் எடுத்தது. அந்த பட்டியலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஜெர்மன் அரசியல்வாதி ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ஐந்து பெண்களுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இந்திய பெண்களின் பட்டியல் வருமாறு.
பெப்சிகோ இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி – 13வது இடம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் அருந்ததி பட்டாச்சார்யா – 36வது இடம்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் – 43வது இடம்
அமெரிக்காவின் சிஸ்கோ சிஸ்டம்ஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பத்ம ஸ்ரீ வாரியர் – 71வதுஇடம்
பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மசூம்தார் ஷா – 91வது இடம்
மேலும் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கடந்த 2013ஆம் ஆண்டு 9ஆம் இடத்தை பிடித்திருந்த சோனியா காந்தி இந்த ஆண்டு முதல் 100 இடங்களில் கூட இல்லை என்பதுதான் ஆச்சரியம்.