ஒருசில வினாடிகள் மட்டுமே மிஸ் யுனிவர்ஸ் ஆக இருந்த துரதிஷ்டமான அழகி.
சமீபத்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் ஸ்பெயின் அழகி பட்டத்தை வென்றுள்ள நிலையில் தற்போது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி நடைபெற்றது. இந்தில் முதலில் கொலம்பிய அழகி அரியட்னா அழகிப்பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனால் மகிழ்ச்சியில் துள்ள குதித்த அரியட்னாவின் சந்தோஷம் ஒருசில வினாடிகள் மட்டுமே நீடித்தது. கொலம்பிய அழகி தவறாக அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும், உண்மையில் பிலிப்பைன்ஸ் அழகி பியா அலோன்ஸோ உர்ட்ஸ்பட்ச் என்ற பெண்ணே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றதாகவும் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் நிகழ்ச்சியின் பொறுப்பாளர் ஸ்டீவ் ஹார்வே அறிவித்தார். இதனால் கொலம்பியா அழகி ஏமாற்றமும், பிலிப்பைன்ஸ் அழகி மகிழ்ச்சியும் அடைந்தார்.
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற “பியா அலோன்ஜோ செய்தியாளர்களிடம் கூறுகையில் “பிரபஞ்ச அழகியாக இருப்பது மரியாதைக்குரிய விஷயம் மட்டுமல்ல; பொறுப்புமிக்கதும் கூட. பிரபஞ்ச அழகியாக தேர்வாகியுள்ள நான் இளைஞர்களுக்காக குரல் கொடுப்பேன். முக்கியமாக எச்.ஐ.வி உள்ளிட்ட நோய் பாதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இதன் அவசியம் அதிகமாக உள்ளது” என்றார்.