திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமகம் காலமானார்
பிரபல திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 78
கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனல் பறக்க பேசி வந்த தீப்பொறி ஆறுமுகம் அவர்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருடைய உடல்நிலையை விசாரித்ததோடு, பொருளுதவியும் செய்தார்.
இந்நிலையில் இன்று அவர் உடல்நலக்குறைவால் காலமானர். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அவரது வீட்டில் திமுக தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.