ரூ.31 கோடி மதிப்புள்ள திருட்டு போன வயலின் மீட்பு.

அமெரிக்காவில் 31 கோடி ரூபாய் மதிப்புள்ள வயலின் ஒன்று சமீபத்தில் திருட்டு போனது. போலீசாரின் தீவிர முயற்சியால் அந்த வயலின் எவ்வித சேதமும் இன்றி மீட்கப்பட்டது.

அமெரிக்காவில் விஸ்கான்சின் பகுதியில் உள்ள ஒரு சிம்பொனி இசைக்கலைஞர் 1715ஆம் ஆண்டு ஸ்ட்ராடிவேரியஸ் இசைக் குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட வயலின் ஒன்றை பயன்படுத்தி வந்தார். இவர் சென்ற வாரம் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டு, திரும்பிக்கொண்டிருந்த போது, திடீரென வழிமறுத்த இருவர், வயலனிலை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அந்த வயலின் இசைக்கலைஞர் காவல்துறையினர்களிடம் புகார் செய்தார். போலீஸார் தீவிர விசாரணை செய்து நேற்று குற்றவாளிகள் மூன்று பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து வயலின் எவ்வித சேதமும் இன்றி மீட்கப்பட்டது. வயலின் எவ்வித சேதமும் இன்றி திரும்ப கிடைத்துள்ளதால் இசைக்கலைஞர் பெரும் நிம்மதி அடைந்துள்ளார்.

 

Leave a Reply