பிரிட்டன் பிரதமரின் ஆலோசகர்கள் திடீர் ராஜினாமா

பிரிட்டன் பிரதமரின் ஆலோசகர்கள் திடீர் ராஜினாமா

சமீபத்தில் நடைபெற்ற பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் தெரஸா மே தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிங் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பிரதமரின் இரண்டு ஆலோசகர்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அவர்களாகவே ராஜினாமா செய்தார்களா, அல்லது அழுத்தம் கொடுக்கப்பட்டார்களா? என்ற செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 2020ஆம் ஆண்டு வரை இருந்த நிலையில் தேர்தல் நடத்தலாம் என்று பிரதமருக்கு ஆலோசனை கொடுத்தது இவர்கள் தான் என்று கூறப்படுகிறது

பிரதமர் தெரசா மேயின் நெருங்கிய ஆலோசகர்களான திமோதி மற்றும் ஹில் ஆகிய இந்த இருவர்கள் தான் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்தவர்களின் முக்கியமானவர்கள் என்றும் தேர்தல் அறிக்கையில் சில முரண்பாடுகள் இருந்ததால் தான் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

இதனையடுத்து திமோதி மற்றும் ஹில் ஆகியோர் பிரதமரின் ஆலோசகர்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இவர்களுடைய ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply