மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கூட்டறிக்கை
தமிழகத்தில் தனித்தனியாக இருந்த எதிர்க்கட்சி தலைவர்களை ‘மாட்டிறைச்சி தடை சட்டம்’ ஒன்றிணைத்துள்ளது. முதல்முறையாக எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த கூட்டறிக்கையை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கம்யூனிஸ்ட் கட்சியின் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து மத்திய அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த கூட்டறிக்கையில் ‘மத்திய அரசின் இந்த முடிவு ஒற்றை கலாசாரத்தை திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம் என்றும், மத்திய அரசின் முடிவு ஏராளமானோரை வேலை இழக்க வைக்க செய்யும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் உணவுக்கான உரிமையை மத்திய அரசின் முடிவு தகர்த்து எறிவதாகவும், எதை உண்ணவேண்டும் என சொல்ல அரசுக்கு அதிகாரம் தந்தது யார் என்றும் அவர்கள் இந்த கூட்டறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.