கடலில் உள்ள மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகம். ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகம் முழுவதும் பிளாஸ்டிக்கை உபயோகிப்பதை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் பொருளாதார நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் உலகில் உள்ள அனைத்து கடல்களிலும் உள்ள மீன்களின் எடையைவிட கடலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகம் என்றும், இதை இப்படியே விட்டால் சுற்றுச்சூழல் பெரிதாக பாதிக்கப்பட்டு எதிர்கால சந்ததிகளுக்கு பெரும் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளில் கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு மிக அதிகமாக அதிகரித்துள்ளதாகவும், இந்த பிளாஸ்டிக் கழிவுகளிடன் எடை கடலில் உள்ள மீன்களின் எடைகளைவிட அதிகமாகிவிட்டதாகவும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டி கழிவுகளை ரீசைக்கிள் செய்து மீண்டும் உபயோகப்படுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுவது கட்டுப்படுத்தப்படும் என்றும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் கடலில் கலக்கப்படும் பிளாஸ்டிக்களில் 95% ஒரே ஒருமுறை பயன்படுத்தப்பட்டு குப்பையில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
Chennai Today News:There will be more Plastic in the Ocean than Fish in 30 year