வியட்நாம் நாட்டில் நாளை பீர் திருவிழா தொடங்க உள்ளது. இதற்காக உள்ளூர் பீர் நிறுவனம் ஒன்று பொதுமக்களுக்கு இலவசமாக பீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த பீர் திருவிழாவுக்கு பெருவாரியான மக்கள் குவிந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் மிக அதிகமாக பீர் விற்பனையாகும் நாடு வியட்நாம் ஆகும். இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் பீர் திருவிழா நடைபெறும், இந்த வருடம் பீர் திருவிழா நாளை நடக்கவுள்ளது. இதற்காக உள்ளூர் பீர் தயாரிப்பு நிறுவனமான ஹானொய் பீர் என்ற நிறுவனம் பொதுமக்களுக்கு இலவச பீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற பீர் திருவிழாவில் 90 மில்லியம் பேர் பீர்த்திருவிழாவில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் குடித்த பீர்களின் அளவு 3 டன் என்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஒருவர் குடித்த பீரின் அளவு 33 லிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இதைவிட அதிகமாக பீர் சப்ளை செய்யப்படும் என தெரிகிறது.