இந்த வார்த்தைகள் பேச தடை!! அதிரடி உத்தரவு!!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் உறுப்பினர்கள் பேசக்கூடாத வார்த்தைகள் பற்றிய புத்தகத்தை மத்திய செயலகம் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக குறப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளுக்கும் இனிமேல் தடை விதிக்கப்பட்டுள்ளது