திருடனின் கையை பொதுமக்கள் முன் வெட்டி தண்டனை கொடுத்த ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள்
சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பெரும்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் திருட்டு உள்பட பல குற்றங்கள் செய்பவர்களுக்கு தங்கள் அமைப்பின் சட்டப்பட்டி கடுமையான தண்டனையை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிரியாவில் உள்ள Raqqa என்ற நகரில் திருடன் ஒருவனை கையும் களவுமாக பிடித்த ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் அவனுடைய கையை வெட்டும் தண்டனையை நேற்று நிறைவேற்றியுள்ளனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பொதுமக்கள் சுற்றியிருக்கும் நிலையில் திருடனின் வலது கையின் ஒரு பகுதியை கோடாரியால் வெட்டி அதன்பின்னர் பேண்டேஜ் வைத்து கட்டினர்.
இந்த தண்டனையின் போது அந்த திருடன் கதறி அழுதது சுற்றியிருந்தவர்களை அச்சத்தில் உறைய வைத்ததாக கூறப்படுகிறது. இதேபோன்ற ஒரு தண்டனையை கடந்த வாரம் ஈராக்கில் உள்ள மோசுல் என்ற நகரில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Chennai Today News: Thief is maimed for life in Raqqa where brutal ISIS Sharia law judges chop off his hand