தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு திருப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் விக்ரமனின் படம்தான் “நினைத்தது யாரோ”.
காதலில் தோல்வி அடைந்த ஐந்து பேர்களை பற்றியதுதான் கதை. இவர்களுக்கு காதல் என்றாலே பிடிக்காதாம். அதுபோல காதல் செய்பவர்களையும் பிடிக்காது. இவர்கள் ஐவரும் ஒரேவிட்டில் தங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் காதல் திரைப்படங்களை எடுக்கும் ஒரு முன்னணி இயக்குனரை சந்திக்கும் இவர்கள், காதல் என்பதே பொய்யான ஒன்று, அதை மையமாக வைத்து ஏன் படம் எடுக்கிறீர்கள் என்று ஐந்து பேர்களும் கேட்க, அதற்கு அவர் காதல் என்பது உண்மையானதுதான், சில சமயங்களில் காதலிப்பவர்கள்தான் பொய்யானவர்களாக இருக்கிறார்கள் என்பதை தனது வாழ்க்கை பிளாஷ்பேக் மூலம் எடுத்து சொல்கிறார்.
அதன்பிறகு அந்த ஐந்து பேர்களும் காதலித்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.
அனுபவமே இல்லாத ஒரு இயக்குனர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி எடுத்திருக்கிறார் இந்த படத்தை இயக்குனர் விக்ரமன். காட்சியமைப்புகளில் அழுத்தமே இல்லை. திரைக்கதை ரொம்ப சுமார்.
படத்தில் வரும் எல்லோருமே புதுமுகம் என்பதால் அவர்களின் முகம் மனதில் பதிய மறுக்கிறது. ஹீரோ ரெஜித் மேனன், ஹீரோயின் நிமிஷா ஆகியோரை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. நடிப்பு பரவாயில்லை எனினும் அடுத்த படம் வந்தால்தான் இவர்களை பற்றி விமர்சிக்க முடியும்.
இசை பால்ராஜ். ஒரே ஒரு பாடல்தான் தேறுகிறது. பின்னணி இசை சுத்தமாக சரியில்லை. இப்படி படம் எடுதால் இனிமெல் யாரும் விக்ரமனை நினைத்துகூட பார்க்க மாட்டார்கள்.